இன்றுமுதல் எரிபொருள் முற்பதிவுகள் இரத்துச் செய்யப்படும் என்று, பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன, நேற்று தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி மீறப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
செயற்பாட்டுக் கட்டணங்களுக்கு வழங்கப்பட்ட 45 சதவீத தள்ளுபடியை மீளப்பெறும் கூட்டுத்தாபனத்தின் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் நாளை முதல் விநியோக சேவையை தவிர்க்கவுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.