கலேவெல மகுலுகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையம் நேற்று பிற்பகல் பல தடவைகள் போர்க்களமாக மாறியுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக எரிபொருளை பெற்று வரும் பிரதேச மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் பலர் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் மகுலுகஸ்வெவ காவல்துறைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் இருந்து நேற்று 23ஆம் திகதி பிற்பகல் எரிபொருள் விநியோகத்தின் போது குண்டர்கள் வந்து அப்பகுதி மக்களை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்காத வேளையில் ஒரேயடியாக பெண்கள் குழுவொன்று வந்து அந்தக் கும்பலைத் தாக்கி விரட்டியடித்துள்ளனர்.
அப்போது, பெண்கள் குண்டர்களை விரட்டியடித்த போதும், பாதுகாப்புப் படையினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. காவல்துறை, இராணுவத்தினர் என அனைவரும் நிறுத்தப்பட்டிருந்த வேளையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை குண்டர்கள் கைப்பற்றியதாக எரிபொருள் எடுக்க வந்த குழுக்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்தாலும் காவல்துறையிடம் இருந்து எவ்வித பாதுகாப்பும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் ஏனைய குழுக்களும் தம்மை தாக்கியதாக நுகர்வோர்கள் ஏற்கனவே மகுலுகஸ்வெவ காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது.