இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) இலங்கைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர்.ஒல்கா தெரிவித்தார்.
எனினும், இந்த அறிவிப்பின் காரணமாக, மற்ற விநியோகஸ்தர்களிடமிருந்து எரிபொருளை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் ஏற்றிய கப்பல் வந்துள்ளதால், பெற்றோலியக் கூட்டுத் தாபன நாட்டுக்குத் தேவையானதைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மசகு எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும் மசகு எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே கொள்வனவு செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.