இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் சரக்குகளின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சட்டப்பூர்வமாக பதிலளிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அமைச்சர் விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில், தற்போது டீசல் மற்றும் எரிபொருள் போதுமான அளவு கையிருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
லக்சபான நீர்மின் நிலையத்தின் செயலிழப்பு, டீசல், எரிபொருள் மற்றும் நீர் முகாமைத்துவத்திற்கு போதிய நிதியில்லாதமையினால் இலங்கை மின்சார சபையால் (CEB) நீடிக்கப்பட்ட மின்வெட்டு கோரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.