மூட்டு, வலிப்பு, இருதயம் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை ஆயுர்வேத மற்றும் வர்மநாடி வைத்திய முறையில் தீர்ப்பது பப்படம் சாப்பிடுவது போன்றது என்று உரும்பிராய் அக்குபஞ்சர் வைத்தியர் கதிரவேலு ரகுராம் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத மற்றும் வர்மநாடி வைத்திய முறை பற்றி தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தந்தை கதிரவேலன் ஆயுர்வேத வைத்தியராக இருந்துள்ளதுடன் தம்மையாரும் ஆயுர்வேதம் கற்றார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ துறையினை இரண்டு ஆண்டுகள் கற்ற நிலையில், பின்னர் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்து ஹற்றனுக்கு சென்றேன்.
அங்கு கோமியபதி வைத்தியர் சந்தகுமாரிடம் முறையாக கோமியபதி பயிற்சி பெற்றதால் அங்கு நாடி பரிசோதனையினை துல்லியமாக அறியவும் கற்றுக்கொண்டேன்.
பின்னர் வைத்தியர் அன்ரன் ஜெயசூரியிடம் அக்குபஞ்சர் சிகிச்சைக்கான பயிற்சியினை பெற்றதுடன் சான்றிதழையும் தனது சிகிச்சைக்கு ஆதாரமாக கொண்டுள்ளேன்.
ஆங்கில மருத்துவமுறையின் மூலம் ஆஸ்துமா, சிறுநீரக நோய்கள், வலிப்பு நோய்கள், மூட்டு நோய் போன்றவற்றினை குணமைடைய செய்ய முடியாது.
அவ்வாறு அதற்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதாயின் பித்தப்பையில் கல்லாயின் பித்தப்பையினை அகற்றுவார்கள் அல்லது ஆஸ்துமாக்கு காலம் முழுவதும் மாத்திரை மருந்துகளை வழங்குவார்கள்.
எமது மருத்துவ முறையானது இறையாண்மை மருத்துவம் என்பதுடன் எமது உடம்பினுள்ளும் நோயினை குணமாக்க கூடிய சக்தி காணப்படுவதாலும் வர்மநாடி நோயாளியின் நாடிகளை சமநிலை செய்து உள்ளுறுப்பிலுள்ள பிரச்சினையினை கண்டுபிடித்து அந்த நாடிகளை நன்னிலை பெற செய்வோம்.
அக்குபஞ்சரில் ஊசிகள் ஏதுமின்றி புள்ளிகளை தூண்டவே வருத்தம் குணமாகின்றது.
ஆங்கில மருத்துவ முறையில் எந்த விதமான சிகிச்சைகளையும் பெறாது இங்கு வருகை தருவர்களாயின் கட்டாயமாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய வருத்தத்தினை கூட குணமாக்க முடியும்.
மேலும் 15 அல்லது 20 வருடங்களிற்குள் ஆஸ்துமா மருந்துகளினால் புற்றுநோயும், அன்டிபயாட்டிஸ் மற்றும் மலேரியா மருந்தினால் சலரோகம், தைரரொட்சின் மற்றும் மூட்டுவாதம் போன்ற நோய்கள் ஏற்படும் என்பதை அனுபவ ரீதியாக கண்டு கொண்டுள்ளேன்.
ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட ஆங்கில மருந்துக்கள் என்பதுடன் அதனால் உடலிலுள்ள னாய் எதிர்ப்பு சக்திகள் குறைவடைந்தே HIV யும் ஏற்படுகின்றது என வைத்தியர் நாம் உணவினை நேரத்திற்கு என்று உண்ணாது பசி ஏற்படுகின்ற பொழுது அல்லது நன்றாக பசி ஏற்பட்ட பின்னர் அறுசுவை அறிந்து உண்டால் நோய் நொடி ஏற்படாது.
அவ்வாறு பசி ஏற்படாத வேளையில் சமைத்த உணவுகளை உட்கொள்ளாது பச்சை காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை எடுத்து கொள்வதுடன் சாக்லெட், பாண், சோடா, சீனி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.