எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளால் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.