ஜிங் கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பத்தேகம, நயாகம மற்றும் நாகொட பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட ஜிங் கங்கைக்கு அண்மித்து தாழ்நிலப்பகுதிகள் இன்று (17) பிற்பகல் 2 மணி வரை கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள் இந்த நிலைமையை மிகுந்த அவதானத்துடன் கையாளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.