கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடலில் தீப்பிடித்து எரிந்த எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மீட்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பு துறைமுகத்துக்கு அருகிலுள்ள கடலில் சுமார் இரண்டு வாரங்கள் எரிந்துகொண்டிருந்த நிலையில் கடலில் மூழ்கியது.
இதனையடுத்து கப்பலின் பாகங்களை மீட்கும் பணிகள் ஆரம்பிபக்கப்பட்டதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹதபுர தெரிவித்தார்.
அத்துடன் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
மேலும் கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தர்ஷனி லஹதபுர குறிப்பிட்டுள்ளார்.