உள்ளூராட்சி சபை தேர்தல்களை பிற்போடுவது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாடு இறுதியில் சர்வாதிகாரத்தை நோக்கி தள்ளப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நம்பிக்கையை இழக்க நேரிடும்
தேர்தல்கள் பிற்போடப்படுவதால் இலங்கை சர்வதேச சமூகத்தின் மத்தியில் பெற்றுக்கொண்ட நம்பிக்கையை இழக்க நேரிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ள சர்வதேச நாணயநிதியத்தின் உதவியை நம்பியிருக்கின்ற இந்த தருணத்தில் நாட்டை மேலும் நெருக்கடிக்குள் தள்ளவேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நாட்டின் நன்மைக்காக முன்வரவேண்டியது அனைத்து கட்சிகள் சிவில் அமைப்புகள் மததலைவர்களின் கடமை எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தல்கள் உரிய நேரத்தில் இடம்பெறுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்த அவர், எதிர்மறையான பெயர் உருவாவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.