உலகின் புகழ்பெற்ற காற்பந்து ஜாம்பவான் பெலே 82 வயது பெலே கடந்த மாதம் 29ஆம் திகதி உயிரிழந்த நிலையில் அவரது உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பெரு (Peru) நாட்டைச் சேர்ந்த 700க்கும் அதிகமான குழந்தைகளின் பெயர் வாயிலாக பெலேவின் புகழ் தொடர்ந்து நீடித்திருக்கும் என பெரு தேசியப் பதிவுத் துறை கூறியுள்ளது.
பெலேவின் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் கடந்த ஆண்டு பிறந்தன என்று பெரு தேசியப் பதிவுத் துறை தெரிவித்தது. அதன்படி பெருவில் 738 குழந்தைகளுக்கு பெலேவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெலேவின் முழு இயற்பெயர்
அப்பெயர்களில் பெலே (Pele), கிங் பெலே (King Pele), எட்ஸோ அடாசீஸ் (Edson Arantes) எட்ஸோ அடாசீஸ் டூ நாசிமேதோ (Edson Arantes do Nascimento) என்ற பெலேவின் முழு இயற்பெயர் ஆகியவை அடங்கும்.
அதேவேளை பெருவில் உள்ள குழந்தைகளுக்கு பெலேவின் பெயர் தவிர்த்து சூட்டப்பட்டுள்ள இதர பிரபலமான பெயர்களின் பட்டியலில், எலிசபெத் அரசியார் (Queen Elizabeth), இரண்டாம் எலிசபெத் (Elizabeth the Second), கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) லியோ மெஸ்ஸி அல்லது மெஸ்ஸி (Leo Messi அல்லது Messi), எம்பாப்பே அல்லது கீலியான் எம்பாப்பே (Mbappe அல்லது Kylian Mbappe), மேவரீக்ஸ் (Mavericks), ஷக்கீரா (Shakira), இலோன் மஸ்க் (Elon Musk) ஆகியோரின் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாது இவற்றையெல்லாம் தாண்டி 2022 உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்திய கத்தார் நாட்டின் பெயரும் கடந்த ஆண்டு பிறந்த ஒரு குழந்தைக்கு சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.