ரஷ்யாவில் -15 டிகிரி குளிரில், தன் மூன்று பிள்ளைகளுடன் பனியில் நிர்வாணமாக நின்றிருந்த தாய் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Natalia Vazina (33) என்ற பெண்ணும் அவரது மூன்று குழந்தைகளான Grigory (10), Lazar (2) மற்றும்11 மாதக்குழந்தையான Marfaவும் உறைய வைக்கும் குளிரில், மாஸ்கோவிலுள்ள வனப்பகுதியில் நிர்வாணமாக நின்றுகொண்டிருப்பதைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.
மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்து வந்த பொலிசார் நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். திருமணமான நகைக்கடை உரிமையாளரான Ilya Klyuev (43) என்பவருடன் வாழ்ந்துவந்துள்ளார் Natalia.திருமணமான ஒருவருடன் இரகசியமாக வாழ்வதை எண்ணி ஒரு கட்டத்தில் குற்ற உணர்ச்சியால் வாதிக்கப்பட்ட Natalia, தற்கொலை செய்வதென முடிவு செய்து இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை எடுத்துள்ளார்.
குழந்தைகளும் Nataliaவும், குளிரால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஹைப்போதெர்மியா மற்றும் frostbite என்னும் பனியால் ஏற்படும் பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறார்கள்.Nataliaவின் மகன் Lazar கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளான். Natalia மீது முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.