கம்பஹா பமுனுகம, சரக்குவ கடற்கரைப் பகுதியில் கடலாமை ஒன்று இறந்த நிலையில் நேற்று (17) கரையொதுங்கி உள்ளது.
நான்கு அடி நீளமும் 30 கிலோ கிராம் எடையும் கொண்ட குறித்த கடலாமை உருக்குலைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம், அமிலத் தன்மை வாய்ந்த பொருட்களை ஏற்றி வந்த எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பல் தீக்கிரையாகி மூழ்கியது.
சரக்குவ கடற்கரையில் இருந்து 8 கடல் மைல் தூரத்தில் மூழ்கிய நிலையில் உள்ள குறித்த கப்பலின் ஒரு பகுதி தென்படுகின்றது.
இந்தநிலையில், கடற்கரை ஓரத்தில் கடந்த ஒரு வார காலத்தில் இறந்த நிலையில் மூன்று ஆமைகளும் திமிங்கலம் ஒன்றும் டொல்பின் ஒன்றும் கரையொதுங்கி உள்ளதாக கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.