ஹோமாகம மற்றும் கேகாலை பிரதேசங்களில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய உயிரிழந்த இருவரை அடையாளம் காண இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
ஹோமாகம பொலிஸாருக்கு கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
உயிரிழந்த நபர் தொடர்பில் ஹோமாகம நீதவான் நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டதோடு, நீதவான் விசாரணையும் நடத்தப்பட்டது.
பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹோமாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் சராசரியாக 05 அடி 02 அங்குல உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், சடலம் அடையாளம் காண முடியாத நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதன்படி, இறந்த நபர் தொடர்பான எந்தத் தகவலும் பின்வரும் தொடர்பு எண்கள் மூலம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி – 0718 591 655
ஹோமாகம பொலிஸ் நிலையம் – 0112855222