மன்னாரில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக கியு.ஆர் அட்டை பதிவுகளை உடனடியாகமேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் அறிவித்துள்ளார்.
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்கும் கியு.ஆர் குறியீட்டு முறை எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடபட்டுள்ளது.
அத்துடன் நடைமுறையில் உள்ள வாகன எரிபொருள் அட்டை முறைமையானது எதிர்வரும் 24ஆம் திகதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.
எனவே அதற்கு முன்பதாக கியு.ஆர் குறியீட்டு அட்டை முறையை மன்னார் மாவட்டத்தில் உள்ள வாகன உரிமையாளர்கள் அனைவரும் பதிவு செய்து கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அதிகாரி மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.