ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து ரணில் விக்கிரமசிங்க தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த துரதிர்ஷ்டவசமான மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரம்சிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய துணை ஜனாதிபதிக்கு அனுப்பிய செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.