வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் இன்று புதன்கிழமை (10) காலை அடையாளம் தெரியாத சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வவுனியா நெளுக்குளம் குளக்கட்டு பாதையூடாக சென்ற நபரொருவர் குளத்தினுள் சடலம் மிதப்பதை அவதானித்த நிலையில் நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார் .
குளக்கட்டின் மேற்பகுதியில் காலணியும் காணப்படுவதினால் இச்சம்பவம் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர் .
மரணம் தொடர்பில் தடவியல் பொலிஸார் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் மஞ்சல் நிற மேற்சட்டையுடன் சாரமும் அணிந்துள்ளமையுடன் 55 தொடக்கம் 60 வயதுக்குட்டவராக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.