வீடு ஒன்றுக்குள் நுழைந்து திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களிடம் தகவல் கோரியுள்ளனர்.
ஹிக்கடுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வவுலகொட பிரதேசத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்த 760,000 ரூபா பெறுமதியான பணம் மற்றும் 2 ஏ .ரி. எம் அட்டைகளை சந்தேக நபர் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
புகைப்படத்தில் இருப்பவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் 071 8591457 , 091 2277222 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்குமாறு ஹிக்கடுவை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

