ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கான பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
கட்சி தலைவரான மஹிந்த ராஜபக்ச, தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச ஆகியோரே இந்த பொறுப்பை நாமலிடம் ஒப்படைத்துள்ளனர்.
இளைஞர்கள் கடும் அதிருப்தி
அடுத்து நடைபெற்றவுள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே இதற்கான நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது.
மொட்டு கட்சிமீது இளைஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் போராட்டத்தின்போது இதனை காணமுடிந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் இளைஞர்களை இலக்கு வைத்து மாவட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் பரப்புரை நடவடிக்கையும் இடம்பெறவுள்ளது.