தகராறு காரணமாகபோதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தி வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞருக்கும் போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவருக்கும் இடையில் சில நாட்களாக தனிப்பட்ட ரீதியில் தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது ஞாயிற்றுக்கிழமை (21) இரவு 11 மணிக்கு சந்தேக நபர்கள் சிலர் குறித்த இளைஞரை கடத்திச்சென்று வீட்டொன்றிற்குள் வைத்து அவரை தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு வீதியில் விட்டு சென்றுள்ளனர். காயமடைந்தவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேசமயம் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.