கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் பிரிவில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் மற்றும் அதிகாரிகள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 01-05-2024 திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனை விமான நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற குறித்த இளைஞன் இன்றையதினம் (06-05-2024) காலை விமான நிலைய பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேலும், விமான நிலையத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை பதிவு செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவரின் வாக்குமூலங்களை பொலிஸார் நேற்று (05) மாலை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.