சக்திவள நெருக்கடியில் இருந்து விடுபட உதவுமாறு இலங்கை விடுத்துள்ள கோரிக்கைக்கு ரஷ்யா பதிலளித்துள்ளது.
அதன்படி இலங்கையின் கோரிக்கை குறித்து , அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் பரிசீலனை செய்துவருவதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் எரிபொருள் நெருக்கடியை அடுத்து அதனை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு செய்ய கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.