இலங்கைக்கு பயணிக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமான நிலையங்களில் இலங்கை பயணிகளின் பயணப்பொதிகளை இறக்கி வைக்கும் திட்டம் ஒன்று தெரியவந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு இலங்கையில் இருந்து எரிபொருள் கிடைக்காததாலும், விமானத்தின் எடையை சமன் செய்ய எரிபொருளை திரும்ப கொண்டு வருவதாலும் இது பெரும்பாலும் செய்யப்படுகிறது.
அந்த நிறுவனங்களும் விட்டு வரும் பயண பொதிகளை வாரத்திற்கு ஒருமுறை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வருகின்றன.
மேலும் இதுபோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணப்பொதிகளை அந்தந்த நாடுகளில் இலங்கை வரும் பயணிகள் விட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.