இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குத்தகை மற்றும் கடன் செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்துள்ளனர்.
3 பெண்களும் 6 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவலறியப்பட்டுள்ளது.