இலங்கையில் பாரிய பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மில்கோ நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட பால் பக்கெட்டுக்கள் பெருமளவு புதைகப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி திகன தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பக்கெட்டுகளில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாகவே இவ்வாறு புதைக்கப்பட்டதாக தொழிற்சாலையின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பால் பக்கட்டுகளை பொலித்தீன் பைகளுடன் புதைப்பதால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மில்கோ நிறுவனத்திற்கு கிடைக்கும் பால் தரம் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஒரு லிட்டர் தரம் குறைந்த பால் 110 ரூபாயை வழங்கி நிறுவனம் பெற்றுள்ளது. மில்கோ நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்பவர்கள் சிலர் தரமற்ற பாலை வழங்குவதாகவும், இந்த பாலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களில் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, அண்மையில் உற்பத்தி செய்யப்பட்ட யோகட்டில் பூஞ்சை கலந்துள்ளதாக குறித்த நிறுவனத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சககாலத்தில் மில்கோ தொழிற்சாலைகளில் தயிர், பதப்படுத்தப்பட்ட பால் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐஸ்கிரீம் ஆகியவை மாத்திரமே அதிகளவில் வெளியிடப்படுவதாக தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திரவ பால், பட்டர் போன்றவற்றின் உற்பத்திக்கு அவர் முன்னுரிமை அளிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதேவேளை கடந்த வருடம் பல சந்தர்ப்பங்களில் பால் பக்கட்டுகள் மண்ணில் புதைக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.