இலங்கையில் பரவிவரும் வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுமையாக முடக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, உறுதிப்படுத்தப்படாத செய்தி என அரசாங்க தகவல்கள் உறுதிப்படுத்தின.
நாடு முடக்கப்படவுள்ளதாக நாட்டு மக்கள் மத்தியில் செய்தியொன்று பரவி வருகின்றது. இந்த செய்தி குறித்து ஆராய்ந்த போதே, இது உறுதிப்படுத்தப்படாத செய்தி என தெரியவந்தது.
கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் கூட்டங்களில் இந்த விடயம் குறித்து இதுவரை ஆராயப்படவில்லை என தெரியவருகின்றது.
நாடு முடக்கப்படும் என தீர்மானம் எட்டப்படும் பட்சத்தின், ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.