2021ஆம் ஆண்டின், டைம் பத்திரிகையின் உலகின் அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில், கனடாவில் வாழும் இலங்கை தமிழ் வம்சாவளியினரான இளம்பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.
இலங்கை உள்நாட்டு யு.த்.தம் ஏற்படுத்திய ம ன க் கா ய ங் களால், தன்னை தமிழ் கனேடியர் என அழைக்க விரும்பும் ஒன்ராறியோவைச் சேர்ந்த மைத்ரேயி இராமகிருஷ்ணன்தான் அந்த கௌரவத்தைப் பெற்றுள்ளவர்.
Never Have I Ever என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடிக்கிறார் மைத்ரேயி.
நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அந்த தொடரில் நடிக்கும் மைத்ரேயி, ஒரு முதலாம் தலைமுறை இந்தோ அமெரிக்க பெ ண் ணா க நடிக்கிறார்.
15,000 பேர் பங்கேற்ற ஒரு நேர்காணலில், 19 வயதான மைத்ரேயி அந்த கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவரும் தொடரின் இணை தயாரிப்பாளருமான Mindy Kaling கூறும்போது, மைத்ரேயியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு ஜாலியான குட்டிப்பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது போலத்தான் இருக்கும்.
ஆனால், அவரை திரையில் பார்க்கும்போது, தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கும் ஒரு பெரிய கலைஞரை பார்க்கும் ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்கமுடியாது என்கிறார்.