கம்பஹா மாவட்டத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த தாயொருவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் கம்பஹா, பாண்டியமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (05-01-2024) இடம்பெற்றுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 3ஆம் லேன், பாண்டியமுல்லையில் வசிக்கும் ஹேரத் முத்யன்செலவைச் சேர்ந்த 81 வயதான ஞானசெலி இந்திரா தடிகம என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை கம்பஹா தலைமையக பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.