இலங்கையில் கட்சி பேதம் இன்றி மக்களை வாழ வைக்கும் போராட்டத்தையே அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் (Akila Viraj Kariyawasam) தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அகிலவிராஜ் இதனைத் தெரிவித்தார்.
நாட்டு மக்களைப் போலவே நாட்டின் எதிர்காலத்தையும் கஷ்டப்படுத்தும் போராட்டமாக இருந்தால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை.
இந்நாட்டு மக்கள் புத்திசாலித்தனமாகவும் தீர்க்கமாகவும் சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது எரிவாயு வரிசைகள், மின்வெட்டு பொருட்களின் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிகரமாக கையாண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.