நுவரெலியா – ரூவான் எளிய பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் வீட்டின் 15 அடி உயரம் கொண்ட பாதுகாப்பு கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரு அறைகள் மற்றும் மலசலகூடம் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இச் சம்பவம் நேற்றைய தினம் (03-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது வீட்டின் குடியிருப்பாளர்கள் இருந்தபோதும் அவர்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதமடைந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலைநாட்டிலும் தொடர்ந்து மழையுடனான காலநிலை நிலவி வருகிறது.
இதேவேளை தொடர்ச்சியான மழைக் காரணமாக பல இடங்களில் மண் சரிவு மற்றும் கற்கள் புரளும் அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.