ரணிலின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தை எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் குழு கூட்டத்திலே இந்த யோசனையை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அரசியல் குழு கூட்டத்தில் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டிரான் அலஸ் மற்றும் சபை உறுப்பினர்களான நிமல் லான்சா மற்றும் அனுர யாப்பா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை பசிலுடன் ரணில் நடாத்திய விசேட கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களை விரைவில் ஆரம்பிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.