இலங்கையில் கோவிட் வைரஸின் மையப்பகுதியாக கொழும்பு தொடர்ந்து உள்ளது.
அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் கண்டறியப்படுகின்றனர்.
பிந்திய தரவின்படி, கொழும்பு மாவட்டத்தில் 511 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொழும்பில் இதே போன்ற மற்றும் அதிக எண்ணிக்கையிலான மக்கள், தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 74,380 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றத்தவறினால் மட்டுமே ஊரடங்கு உத்தரவு பரிசீலிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.