இலங்கையில் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் மூன்று பேர் கொரோனா தொற்றினால் உயிரிழக்கின்ற பரிதாபகரமான நிலைமை ஏற்படப்போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை மருத்துவச் சபையின் உப தலைவர் விசேட மருத்துவ நிபுணர் டாக்டர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ,கடந்த காலத்தில் நாளாந்தம் 20000 பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டபோது 2000 தொடக்கம் 3000 வரையிலான தொற்றாளர்களே இனங்காணப்பட்ட போதிலும் இன்று வெறும் 10000 பி.சி.ஆர் பரிசோதனையே நடத்தப்படுவதில் 2000 தொற்றாளர்கள் என்று கூறுவதை யதார்த்தத்துடன் ஒப்பீடு செய்யும்போது ஏற்கமுடியாது என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.