நாடளாவிய ரீதியில் இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலாக்கப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்வெட்டு தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய A முதல் L வரையான வலயங்களில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலமும், 15 நிமிடமும் மின்வெட்டு அமுலாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த வலயங்களில் இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில், 2 மணிநேரமும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியில், ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்நிலையில், P முதல் W வரையான வலயங்களில் இன்று மாலை 4.30 முதல் இரவு 9.30க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்வெட்டு தடைப்படவுள்ளது