இலங்கையில் அனைத்து பாடசாலைகளும் கடந்த 22ம் திகதி அரசாங்கம் விடுமுறை வழங்கியதால் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகர்கள் வருகை தந்திருந்தனர்.
கூடுதலாக புகையிரத வழியாக ஹட்டன் நகருக்கு வந்து, அங்கு இருந்து அரச பேருந்து மூலம் அதிகளவில் யாத்திரிகர்கள் வருகை தருவதாக, ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரியும் ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரியும் தெரிவித்தார்கள்.
கொட்டும் மழையில் நனைந்து கொண்டே மழை உச்சியில் சென்று தரிசனம் செய்து விட்டு யாத்திரிகள் திரும்புகின்றனர்.
அதேபோல் சிரிய ரக வேன் கார் முச்சக்கர வண்டிகள் உந்துரில்லிகள் மூலம் அதிக அளவில் வருகின்றனர்.
கடந்த காலங்களில் தனியார் பேருந்து மற்றும் அரச பேருந்து வாடகைக்கு அமர்த்தி வருவது அதிகமாக இருந்தது.
இம்முறை எரிபொருள் விலை அதிகரித்ததால் அவ்வாறு வருவதை தவிர்த்து, அரச பேருந்து மற்றும் புகையிரத வழியாக வருவது அதிகமாக உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.