ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28ம், 29ம் திகதிகளில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் உட்பட 24 பேர் கொண்ட குழுவொன்று இந்த விஜயத்தில் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜப்பானிய அமைச்சர் ஒருவர் இந்நாட்டிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய அரசாங்கத்தின் கூட்டுக் குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் கடன் மறுசீரமைப்புத் திட்டம் குறித்து கலந்துரையாடுவதே யோஷிமாசா ஹயாஷியின் விஜயத்தின் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.