12,000 முதல் 15,000 மெட்றிக் டொன் யூரியா உள்ளிட்ட இரசாயன உரங்கள், அடுத்த சில வாரங்களில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது.
இரசாயன உர இறக்குமதித் தடை நீக்கப்பட்டதன் பின்னர், கடந்த சில தினங்களில் 1,500 மெட்றிக் டன் யூரியா உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய உர செயலகத்தின் பிரதிப் பணிப்பாளர் கசுன் மஹதன்தில தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எஞ்சிய இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கான கட்டளைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதற்கமைய, குறித்த இரசாயன உரங்கள், கப்பல் மூலம் சில வாரங்களில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறிருப்பினும், டொலர் இல்லாமை மற்றும் கடன் சான்றுப் பத்திரங்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்பன காரணமாக, இரசாயன உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.