இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண் தரவுகளின்படி, நேற்று (17) காலை கொழும்பு நகரில் காற்று மாசுபாடு கடுமையாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
சுட்டெண்ணின் படி, கொழும்பு நகரின் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சூழவுள்ள காற்றில் உள்ள தூசித் துகள்களின் அளவு நேற்று காலை 163 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை கொழும்பு – 7 இல் இந்த எண்ணிக்கை 141 ஆக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் தரவுகளின் படி, அதே எண்ணிக்கை கொழும்பிலும் 78 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், பதுளை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய நகரங்களைச் சுற்றி வளிமண்டலத்தில் தூசி துகள்களின் சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் இருந்து வீசும் மாசு காற்றின் தாக்கம் காரணமாக இலங்கையிலும் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர், கழிவு முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் சுவாசக் கோளாறு உள்ளவர்கள் முகமூடி அணிவது சிறந்தது எனவும் அறிவுறுத்தினார்.