இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
இலங்கைக்கு எதிரான இந்திய ரி20 அணியின் தலைவராக ஹர்திக் பாண்டியாவும், துணை தலைவராக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு தலைவராக ரோகித் சர்மாவும், துணை தலைவராக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ந் திகதி நடைபெறுகிறது.
ஜனவரி 12ந் திகதி கொல்கத்தாவில் 2வது ஒருநாள் போட்டியும், ஜனவரி 15ந் திகதி திருவனந்தபுரத்தில் 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.