தென்மேற்கு வங்கான விரிகுடாவில் உருவான தாழமுக்கம் இலங்கையின் கிழக்கு கடற்கரை வழியாக இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்க நிலை நாட்டை ஊடறுத்து செல்லவுள்ள நிலையில், எதிர்வரும் மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
எனவே, கடலுக்குச் செல்லும் போது கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பில் கண்டி வரையான தொடருந்து சேவை பிலிமத்தலாவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நிலைமையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன நேற்று (24-12-2022) தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட தாழமுக்கமானது,
கடந்த 06 மணித்தியாலத்தில் மணிக்கு 8 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 05.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து வட கிழக்காக 110km தூரத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்டது.