இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 400 கிலோ கஞ்சா, தமிழ்நாட்டின் நாகபட்டினம் கடற்கரையில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்படையை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது தமிழக பொலிஸாருக்கு இலங்கையில் இருந்து கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்று தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி நாகபட்டினம், அக்கரைப்பேட்டை ஊடாகவே இலங்கைக்குக் கஞ்சா கடத்தப்படவிருந்தது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்