ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, கைகூப்பி கும்பிட்ட அதியுயர் அதிகாரியால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதுடன், கை கூப்பி கும்பிட்ட அந்த அதிகாரியின் செயல்பாடானது ஒட்டுமொத்தக் கல்விமுறையின் இறுதியான திவால் நிலையாகும் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையை திறப்பதற்காக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் காரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சென்றிருந்தார்.
இதன்போது அதிவேக நெடுஞ்சாலையில் பயணச்சீட்டு கொடுக்கு நபர் கைகூப்பி கும்பிடும் புகைப்படம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் மூத்த அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான குசல் பெரேரா சமூக வலைத்தளத்தில் கருத்துப் பகிர்ந்துள்ளார்.
இந்தக் காட்சி நமது ஒட்டுமொத்தக் கல்விமுறையின் இறுதியான திவால் நிலையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியை குடும்பிடுபவர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் என தெரியவந்துள்ளது. அத்துடன் அவர் ஒரு பொறியிலாளர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு படித்தவர்கள் குடும்பிடுவது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.