ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவிக்காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பார் என அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில், முன்னாள் அமைச்சர்களுடனான விசேட சந்திப்பொன்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதிலும், புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.