தனது மனைவியின் இறுதிச் சடங்கிற்கு பணம் இல்லாததால் அவரது சடலத்தை இரகசியமாக வீட்டின் பின்புறத்தில் புதைத்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மனைவியின் டசலத்தை புதைத்த குற்றச்சாட்டில் அவரது கணவர் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு செய்வது சட்டத்துக்கு முரணான செயல் என்பதாலேயே கணவர் கைது செய்யப்பட்டதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விஜயபுர, பண்டுகாபய புர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தனது தாயாரை பார்ப்பதற்குச் செல்வதாகவும், சில நாட்களாக அவர் வரவில்லை எனவும் அவரது உறவினர் ஒருவர் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போதே மனைவி இறந்ததால் அவரை அடக்கம் செய்ய பணமில்லை என சடலத்தை இரகசியமாக வீட்டின் பின்புறத்தில் புதைத்த சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது.
எனினும் பெண் என்ன காரணத்தால் உயிரிழந்தார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

