பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் பீடத்தில் பயின்று வந்த மூன்றாம் வருடத்தை சேர்ந்த மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவர் 23 வயதுடைய சச்சினி கலப்பத்தி என்று கூறப்படுகின்றது.
இவரது பெற்றோர்கள் இவரது கண் உடன்பட இவரது உடல் பாகங்கள் அனைத்தையும் பேராதனைய வைத்தியசாலைக்கு தானமாக வழங்க தீர்மானித்துள்ளனர்.
விபத்து
சச்சினி உட்பட இவரது இரு நண்பிகளும் ஹில்டா ஒபேசேகர விடுதிக்கு செல்லும் நேரமே இவ்வாறு விபத்துக்குள்ளாகயுள்ளார்.
அதனை தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் தங்காலை பெண்கள் கல்லூரியின் பழைய மாணவி என தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் கடந்த வெள்ளிக்கிழமை தங்காலை பொது மயானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.