இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, பின்னர் அரசாங்கத்தில் இணைந்துகொண்ட டயனா கமகே ஆகியோரோ ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் தமக்கு ராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளமை தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என கீதா குமாரசிங்க மற்றும் டயனா கமகே ஆகியோர் ஊடகங்களிடம் கூறியுள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு போக்குவரத்து ராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளது. அந்த பதவியை வகித்த திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து ராஜாங்க அமைச்சர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.