களுத்துறையில் முச்சக்கரவண்டியில் வருகை தந்த இருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி கைகளை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் களுத்துறை பண்டாரகம வல்கம சுனாமி வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அவர்களில் ஒரு இளைஞரின் இரண்டு கைகளும் இரண்டு துண்டாக வெட்டப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவரின் ஒரு கை துண்டாக வெட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, அண்மையில் விடுதலையான நபரே நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான நபர்கள் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. எனவும் அதனை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.