காலி, கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இராணுவப் பேருந்து மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இவ் விபத்து நேற்று (05) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 70 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் அடையாளம் இது வரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் இராணுவ பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அக்குரஸ்ஸ, வெலிகம பிரதான வீதியின் உடுகாவ பகுதியில் நேற்று (05) பிற்பகல் இரண்டு பஸ்கள் மோதியதில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.