கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இராணுவத்தினரின் சிறியராக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை யாழ்.மீசாலையில் இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தின் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மீசாலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத நிலையில் வாகனம் முன்பக்கம் சேதமடைந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் இராணுவ போக்குவரத்து பொலிஸார் மற்றும் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்தாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.