இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் குறித்த வழக்கு, நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சந்தேகநபரான மெய்பாதுகாவலரை நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இந்நிலையிலேயே சந்தேகநபரான மெய்பாதுகாவலரை, எதிர்வரும் 26ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி எ.சி.எம்.றிஸ்வான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த யூன் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவர், பொதுமகன் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில், (34 வயது) மகாலிங்கம்