இலங்கை, உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்துவரும் வரும் விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாளை (வியாழக்கிழமை) முதல் நீக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டாவிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மற்றும் செல்லுபடியாகும் ஐக்கிய அரபு இராச்சிய வதிவிட அனுமதி வைத்திருக்கும் பயணிகள் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இரண்டாவது தடுப்பூசி அளவைப் பெற்ற பிறகு குறைந்தது 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும். இதற்காக அவர்கள் சான்றிதழும் வைத்திருக்க வேண்டும்.
இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் நாடு திரும்பலாம்
No Comments1 Min Read
Previous Articleவிவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே
Next Article யாழ்.பருத்தித்துறையில் கொரோனாவுக்கு பலியான நபர்!

